;
Athirady Tamil News

காதல் விவகாரத்தில் மகளை ஆணவக் கொலை செய்து உடலை எரித்த தந்தை!

0

ஆந்திரப் பிரதேசத்தில் தனது விருப்பத்தை மீறி காதலித்த மகளை தந்தை ஒருவர் ஆணவக் கொலை செய்துள்ளார்.

ஆனந்தப்பூர் மாவட்டத்தின் குண்டாக்கலின் திலக் நகரைச் சேர்ந்தவர் துபாக்குலா ராமா ஆஞ்சநேயலு, இவரது 4 மகளில் இளையவரான துபாக்குலா பாரதி (வயது 20) என்பவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

அவரது மகள்களில் இவர் தான் படித்தவர் என்று கூறப்படும் நிலையில், அவர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதற்கு, அவரது தந்தையான துபாக்குலா ராமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், அவர்களது வீட்டில் குடும்பத்தினருக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் தான் தனது காதலரை திருமணம் செய்து கொள்வேன் என பாரதி உறுதியாகக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது தந்தை கடந்த பிப்.1 அன்று பாரதியை திக்காசாமி தர்காவின் அருகில் அழைத்து சென்று அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், ஆதாரங்களை அழிப்பதற்காக அவரது உடலை ஹன்றி-நீவா கால்வாயின் அருகில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 5) காசப்புரம் காவல் நிலையத்தில் சரணடைந்த ராமா, தனது மகளை ஆணவக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர் ஆதாரங்களை திரட்டினர். பின்னர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.