புஷ்பராஜாவின் சகோதரர் விமான நிலையத்தில் கைது

அம்பாறை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட செந்நெல் கிராமப் பகுதியில், விசர்நாய் ஒன்று 7 பேரைக் கடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (12) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அடுத்து, உடனடியாக செயல்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினர், வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை விசாரித்தனர்.
நாயின் தலை பரிசோதனைக்கு
இதனையடுத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அப்பகுதி இளைஞர்களால் கொல்லப்பட்ட அந்த நாயின் தலையை மீட்டு, வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்துப் இன்று (13) அப்பகுதியில் உள்ள விசர்நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 3 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்கள் இவ்வாறு விசர் நாய் கடிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுக்ம் நிலையில், பொதுமக்கள் விசர்நாய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.