;
Athirady Tamil News

ஸ்டார்மரின் முடிவால் வேலையை இழக்கவிருக்கும் 10,000 NHS பணியாளர்கள்

0

பிரதமர் ஸ்டார்மரின் முடிவால் பிரித்தானியாவில் 10,000 NHS பணியாளர்கள் வேலையிழக்கவுள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), NHS England அமைப்பை கலைக்கும் என அறிவித்ததையடுத்து, 10,000 பணியாளர்கள் வேலையிழக்க வாய்ப்பு உள்ளது என The Mail செய்தி வெளியிட்டுள்ளது.

NHS England முடிவுக்கான காரணம்
பொது சேவைகள் வளர்ச்சிக்காக ஏராளமான பணியாளர்கள் சேர்க்கப்பட்டாலும், அதற்கான எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

“தேசிய சுகாதார சேவையை ஜனநாயக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே நோக்கம்” என அவர் விளக்கினார்.

அமைப்பின் மாற்றம் மற்றும் பாதிப்பு
NHS England, 190 பில்லியன் பவுண்டுகளை ஆண்டுதோறும் செலவிடும் ஒரு மிகப்பெரிய அமைப்பாகும்.

இந்த அமைப்பின் தற்போதைய 15,000 பணியாளர்களில் 9,000 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இதன் செயல்பாடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில், சுகாதாரத் துறைக்குள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதனால் நூறுகணக்கான கோடிகள் மிச்சப்படும்” என பிரித்தானிய சுகாதாரத்துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் கூறியுள்ளார்.

NHS England எனும் உலகின் மிகப்பெரிய அரை-தன்னாட்சி அரசு சாரா அமைப்பு (Quango) சீரமைக்கப்பட உள்ளதால், பல மருத்துவ சேவைகள் மாற்றம் பெறலாம்.

ஆனால், வேலையிழக்கும் பணியாளர்கள் வேறு பணிகளில் மாற்றம் செய்யப்படுவார்களா? என்பது தெளிவாக இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.