;
Athirady Tamil News

ஐரோப்பாவை மிரட்டும் ட்ரம்ப்… 200 சதவிகிதம் வரி உறுதி: தீவிரமடையும் வர்த்தகப் போர்

0

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் ஸ்பிரிட்களுக்கு 200 சதவிகித வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஐரோப்பாவில் அமுல்
அமெரிக்க விஸ்கிகளுக்கு 50 சதவிகித வரி விதிப்பு என்பது ஏற்புடையது அல்ல என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கடுமையான பதிலடி உறுதி என தெரிவித்துள்ளார்.

எஃகு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா 25 சதவிகித வரி விதித்துள்ளதை அடுத்து, ஏப்ரல் 1 ம் திகதி முதல் அமெரிக்க விஸ்கிக்கான கூடுதல் விலை திட்டம் ஐரோப்பாவில் அமுலுக்கு வரவிருக்கிறது.

இதனிடையே புதன்கிழமை ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அயர்லாந்து தலைவர் மைக்கேல் மார்ட்டின் தெரிவிக்கையில், வரி விதிப்பால் பணவீக்கம் அதிகரிக்கும், பணவீக்கம் நுகர்வோருக்கும் நல்லதல்ல, வணிகத்திற்கும் நல்லதல்ல, இதுதான் எங்கள் கருத்து என குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் மிரட்டல்
அதேவேளை எஃகு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவிகித வரி விதிப்புக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படும் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

மேலும், ட்ரம்பின் இந்த நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாகவும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவுக்கு எதிராக இதுவரை வரி விதிப்பு தொடர்பில் பிரித்தானியா எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.

இந்த நிலையிலேயே ஐரோப்பிய ஒயின், ஷாம்பெயின் மற்றும் ஸ்பிரிட்களுக்கு 200 சதவிகித வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.