பாடசாலை மாணவர்கள் அடிதடியில் இருவர் காயம்

நுகேகொடை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தாக்குதலில் இருவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நுகேகொடை பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இரண்டு மாணவர்களும் தலவதுகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் ஒருவர் இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.