;
Athirady Tamil News

பிரித்தானியாவில் மாற்றாந்தந்தையால் திருமணத்தில் ஏற்பட்ட சங்கடம்: வேதனையை வெளிப்படுத்திய புதுமணப்பெண்

0

தனது மாற்றாந்தந்தை தன்னை ஆச்சரியப்படுத்த, திருமண வரவேற்பில் செய்த ஏற்பாட்டினால் அனைவரும் சங்கடப்பட்டதாக பிரித்தானியப் பெண் தெரிவித்துள்ளார்.

திருமணத்தில் சங்கடம்
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், ரெடிட் சமூக வலைதளத்தில் தனது திருமணத்தில் நடந்த சங்கடமான விடயத்தை பகிர்ந்துள்ளார்.

கடந்த 18 மாதங்களுக்கு முன் அப்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. அவரது வரவேற்பின்போது மாற்றாந்தந்தை, மணமக்களை ஆச்சரியப்படுத்த பாடல் பாடும் Chef ஒருவரை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆனால் அதுதான் அனைவரையும் சங்கடப்படுத்தியது. Chef உடையில் வந்திருந்த அந்நபர், சமையலறையில் இருந்து வெளியே வந்து மணமக்களிடம் பாடலைப் பாட விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் அவர் 30 நிமிடங்கள் வரை பாடல் பாடியுள்ளார்.

இதனால் என்ன நடக்கிறது என்றே புரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருந்துள்ளனர். அத்துடன் முழு திருமணமும் கடுமையான காலக்கெடுவுடன் திட்டமிடப்பட்டிருந்ததால், குறித்த நபரின் செயலால் மிகவும் தாமதமாகியுள்ளது.

திட்டமிட்டபடி சூரிய மறைவு படங்களையும் அவர்களால் எடுக்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக குறித்த பாடகர், மணமகனின் தாயாரின் இறுதிச்சடங்கு பாடலைப் பாடியது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.

ஆச்சரியப் பரிசு
இந்த பாடல் இடம்பெறக்கூடாது என்று ஏற்கனவே மணமக்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் குறித்த பாடகரை அவர்கள் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் தனது கணவரின் குடும்பத்தினர் சோகமடைந்து துடித்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

கடைசியில்தான் தனது மாற்றாந்தந்தை ஏற்பாடு செய்திருந்த ஆச்சரியப் பரிசு இது என்று அவருக்கு தெரிய வந்துள்ளது. அது அப்பெண்ணை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

அவர் தனது தாயிடம் கூட தனது திட்டத்தை கூறாததால் அவரும் வருத்தப்பட்டதாகவும் தனது பதிவில் கூறியுள்ளார்.

அப்பெண் இறுதியாக தனது பதிவை இப்படி முடித்தார், “நான் அவரது இந்த பரிசால் வருத்தப்படுவது சரிதானா அல்லது அவரின் இந்த செயலுக்கு நன்றியுடன் இருக்க வேண்டுமா” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.