ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: 7 பேர் உயிரிழந்த பரிதாபம்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஹோலி கொண்டாட்டத்தின்போது, நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஹோலி பண்டிகை
நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்பட்டது. சிறுவர்களும், பெரியவர்களும் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், நீரில் பொடிகளை கரைத்து ஊற்றியும் விளையாடுவதுதான் இந்தப் பண்டிகை.
புனே மாவட்டத்தின் கின்னாய் கிராமத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது, ஆற்றில் குளிக்க சிலர் சென்றுள்ளனர். அவர்களில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து மூவரின் உடல்களை மீட்டனர்.
4 சிறுவர்கள்
அதேபோல் தானே மாவட்டத்தில் 4 சிறுவர்கள் ஹோலி கொண்டாடிவிட்டு கை, கால்கள் கழுவ ஆற்றில் இறங்கியுள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே நாளில் ஹோலி கொண்டாட்டத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.