பொறியியலாளர் உட்பட்ட 9 பேர் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது

சூரியவெவ, மகாவலி, பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டிய 9 பேர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கடற்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் பொறியியலாளர் ஒருவரும் அடங்குவதாகவும், ஏனைய சந்தேக நபர்கள் மித்தெனிய மற்றும் சூரியவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 35, 40 வயதுடையவர்கள் என்பதுடன் சந்தேக நபர்களுடன் வேன், முச்சக்கர வண்டி மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.