நள்ளிரவில் போதைப்பொருளுடன் நடந்த விருந்துபசாரம்: 29 இளைஞர்கள் கைது

பியகம பகுதியில் முகநூல் மூலம் விருந்துபசாரத்துக்கு ஒன்றுகூடிய இளைஞர்கள் 29 பேரை இன்று (16) காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த விருந்து நேற்று (15) இரவு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விருந்து நடைபெறுவதாகவும், நள்ளிரவில் அதிக சத்தங்களை எழுப்புவதாகவும், அப்பகுதிவாசிகளை துன்புறுத்துவதாகவும் கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் வைத்திருந்த மூன்று பேர் உட்பட 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 29 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.