சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்ததால் பல தொடருந்து சேவைகள் தாமதம்

கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, அனைத்து வழித்தடங்களிலும் தொடருந்து தாமதங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.