;
Athirady Tamil News

மலேரியா நோயாளி யாழில் அடையாளம்

0

யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயதான இளைஞர் ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த இளைஞன் ஐரோப்பாவிற்குச் செல்வதாக முகவர்களினால் கடந்த வருடம் 2024 மார்கழி மாதம் 28ஆம் திகதி விமானத்தில் கொழும்பு, மும்பை, நைரோபி வழியாக சியாரா லியோன் என்ற மத்திய ஆபிரிக்க நாட்டில் இறக்கிவிடப்பட்ட நிலையில் அவரது பயணம் தடைப்பட்டு சுகவீனமுற்று இருந்தமையால் குடும்பத்தவர்களால் மீளவும் இலங்கைக்கு கடந்த 11ஆம் திகதி அழைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரினைப் பாதித்த மலேரியாக் கிருமி பிளாஸ்மோடியம் ஃபல்சிபோறம் என்பதாகும்.

இலங்கையில் மலேரியா நோய் முற்றாக அழிக்கப்பட்டமையினால் மீண்டும் நுளம்பின் மூலம் தொற்றும் மலேரியா நோய் பரவாது
இருப்பதற்கு இவ்வாறு வெளிநாடு சென்று மீள்பவர்கள் விமான நிலையத்திலுள்ள வைத்திய அதிகாரியிடமோ அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ வைத்தியசாலையிலோ அணுகி உரிய மருத்துவ ஆலோசனையும் தடுப்பு மருந்தும் பெறலும் அத்தியாவசியமாகும் என போதானாவின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனாநந்தா அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.