AI (Arificial Intelligence) தொழில்நுட்பம் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

AI (Arificial Intelligence) தொழில்நுட்பம் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (17.03.2025) செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி தொடக்கம் பி.ப 12.30 மணி வரை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், தற்போதைய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் மிக முக்கியமானதாக மாறிவிட்டதாகவும், சர்வதேச ரீதியாக புகழ் பெற்றுள்ள துறையாக இந்த AI தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது எனவும், இது தொடர்பில் ஓரளவு தெளிவு இருந்தாலும் இந்த தொழில்நுட்பம் தொடர்பாக மேலதிக தெளிவுகளை முழுமையாக பெற்றுக்கொள்ள இவ்வாறான சந்தர்ப்பங்களை வினைத்திறனாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இச் செயலமர்வில் உத்தியோகத்தர்களுக்கு AI தொழில்நுட்பம் என்றால் என்ன என்பது பற்றியும், அதன் முக்கியத்துவம் மற்றும் அரச அலுவலகங்களில் அதன் தேவைப்பாடு மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இச்செயலமர்வில் றுகுணு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நளின் விஜயசிங்க, சிரேஸ்ட விரிவுரையாளரும் ருகுணு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க நிலைய பணிப்பாளருமான கலாநிதி சுரேன்ஜித் குணசேகர, மாவட்ட, பிரதேச செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.