;
Athirady Tamil News

ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த மீனவர்! 95 நாட்கள் கடலில் தத்தளித்த அவலம்

0

95 நாட்கள் கடலில் தத்தளித்த 61 வயது பெருவிய மீனவர் மாக்சிமோ நாபா காஸ்ட்ரோ, அசாத்திய மன உறுதியுடன் மீட்கப்பட்டு தனது குடும்பத்துடன் உணர்ச்சிகரமாக இணைந்தார்.

95 நாட்கள் கடலில் தத்தளித்த மீனவர்

காஸ்ட்ரோ டிசம்பர் 7ஆம் திகதி, தெற்கு பெருவின் கடலோர நகரமான மார்கோனாவில் இருந்து வழக்கமான இரண்டு வார மீன்பிடி பயணத்தை தொடங்கியுள்ளார்.

துர்திஷ்டவசமாக, பத்து நாட்களுக்குப் பிறகு சக்திவாய்ந்த புயல் ஒன்று அவரது சிறிய படகை திசை திருப்பி அவரை தனிமைப்படுத்தியுள்ளது.

இதையடுத்து காஸ்ட்ரோவின் குடும்பம் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.

இருப்பினும், பரந்த கடலில் பெருவிய கடற்படை அதிகாரிகளால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பத்திரமாக மீட்கப்பட்ட மீனவர்
கிட்டத்தட்ட 95 நாட்களாக கடலில் தத்தளித்த காஸ்ட்ரோ இறுதியில் ஈக்வடார் ரோந்து கப்பலான “டான் எஃப்” பெருவிய கடற்கரையிலிருந்து சுமார் 1,094 கிலோமீட்டர் (680 மைல்) தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டார்.

காஸ்ட்ரோ கண்டுபிடிக்கப்பட்ட போது கடுமையான நீரிழப்பு மற்றும் ஆபத்தான உடல் நிலையுடன் காணப்பட்டுள்ளார்.

ஸ்ட்ரோ தனது வலிமை மற்றும் விடாமுயற்சிக்கு தனது குடும்பத்தின் நினைவுகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

உயிர் பிழைப்பு உத்திகள்
அவர் படகில் மழைநீரை சேகரித்து நீரேற்றத்தை தக்கவைத்துள்ளார்.

மேலும், கடலில் பிடித்த மீன் பறவைகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் உட்பட பூச்சிகளை உட்கொண்டு உயிர் தப்பியுள்ளார்.

குறிப்பாக இக்கட்டான நிலையில் அவர் கடல் ஆமைகள் பிடித்து உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டதோடு, மீட்புக்கு முந்தைய கடைசி பதினைந்து நாட்களில், அவர் முழுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.