;
Athirady Tamil News

தெற்கு எல்லையில் நாசகார கப்பலை நிறுத்திய ட்ரம்ப்

0

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, தெற்கு எல்லையில் அமெரிக்கா ஒரு கடற்படை கப்பலை நிறுத்தியுள்ளது.

பனாமா கால்வாயை கைப்பற்றுவேன் என ட்ரம்ப் கூறி வரும் நிலையில், செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்த்து அமெரிக்க படைகள் போராடி வருகின்றன.

இந்த நிலையில், டசன் கணக்கான டோமாஹாக் கப்பல் ஏவுகணைகளை சுமந்து செல்லும் destroyer USS Gravely கப்பலை அமெரிக்க கடற்படை தெற்கு எல்லையில் நிறுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த கப்பல் ட்ரம்ப்பின் உத்தரவின்படி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வலுவான பதிலடிக்கு இந்தப் போர்க்கப்பல் பங்களிக்கும்
இந்த கப்பலானது மத்திய கிழக்கில் ஹவுதி படைக்கு எதிரான போராட்டத்தில் 9 மாதங்கள் இருந்தது.

தற்போது அமெரிக்க கடலோர காவல்படையால் வழக்கமாக ரோந்து செய்யப்படும் நீரில் நிறுத்தப்படும் என்றும், இது சர்வதேச நீர்நிலைகளிலும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வடக்கு Command General Gregory Guillot கூறுகையில், “கிரேவ்லி கப்பல் அமெரிக்காவின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பை காப்பாற்ற உதவும். கடல்சார் தொடர்பான பயங்கரவாதம், ஆயுதப் பெருக்கம், நாடுகடந்த குற்றம், கடற்கொள்ளை, சுற்றுச்சூழல் அழிவு மற்றும் சட்டவிரோத கடல்வழி குடியேற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைந்த மற்றும் வலுவான பதிலடிக்கு இந்தப் போர்க்கப்பல் பங்களிக்கும்” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.