;
Athirady Tamil News

படிக்கவில்லை என்பதால் குழந்தைகள் கொன்ற தந்தை; மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

ஏழு மற்றும் ஆறு வயதுடைய மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட பகீர் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) ஊழியராக இருந்தவர் 37 வயதான சந்திர கிஷோர். இவருக்கு ஏழு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர்.

எதிர்காலத்தில் குழந்தைகள் சிரமப்பட வேண்டியிருக்கும்
கடந்த 14 ஆம் திகதி இரவு 10 மணியளவில் அவர்களை தண்ணீர் நிறைந்த வாளியில் மூழ்கடித்து கொன்ற பின்னர் அவர் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியில் சென்ற அவரது மனைவி அறைக்கதவை திறந்தபோது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் மயக்கமடைந்த நிலையிலும் இருப்பதைக் கண்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், சந்திர கிஷோர் தனது மகன்கள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால், எதிர்காலத்தில் அவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என பயந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மன அழுத்தத்தால், அவர் இவ்வளவு இறுதியில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.