பிரித்தானியாவில் கோர கார் விபத்து: மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

பிரித்தானியாவில் நடந்த கார் விபத்து சம்பவத்தில் 3 இளைஞர்கள் உயிர் பறிபோனது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்து
ஷ்ரோப்ஷயரில் அமைதியான கிராமப்புற சாலையில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததுடன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
ஷ்ரோப்ஷயர், ஷிஃப்னல் அருகே உள்ள டோங் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 11:15 மணியளவில் இந்த கோர கார் விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆஃபோக்ஸி சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், வெள்ளி நிற Audi A1 கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்கான காரணம் குறித்து வெஸ்ட் மெர்சியா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
காவல்துறை வேண்டுகோள்
விபத்தில் சைமன் எவன்ஸ்(18), ஜேக்கப் ஹோல்மேன்(17), ஜென்சன் பிரிட்ஜஸ்(17) என மூவர் உயிரிழந்து இருப்பதாக விவரங்கள் வெளியாகியுள்ளன.
விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.