;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் விமான விபத்து – தேடப்படும் மூவரின் உடல்

0

சுவிட்சர்லாந்தில் சிறிய ரக விமானம் மலை மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விமான விபத்து
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த Extra EA-400 எனும் சிறிய ரக விமானம், கடந்த மார்ச் 13 ஆம் திகதி சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வந்தடைந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5.20 மணியளவில், சேம்டன் விமானத் தளத்திலிருந்து மீண்டும் டென்மார்க் செல்வதற்காக புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட 2 நிமிடத்தில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், விமானம் முற்றிலுமாக தீ பற்றி எறிந்துள்ளது.

இதில் பயணித்த 3 பேரின் உடலும் தற்போது வரை கிடைக்காத நிலையில், 3 பெரும் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் கருதுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.