கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் நினைவரங்கம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 19.03.2025 புதன்கிழமை காலை திருவள்ளுவர் நினைவரங்கம் இடம்பெற்றது
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை முதலாம் வருட ஆங்கில நெறி ஆசிரிய மாணவி தேவராசா தனுஷாயினி நெறிப்படுத்தினார்
திருக்குறள் கலாநிதி ஓய்வு நிலை அதிபர் ஆ. வடிவேலு அதிதி பேச்சாளராக கலந்து கொண்டார்
விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவர் இ. செந்தூர்ச்செல்வன் அதிதிக்கான அறிமுக உரையை ஆற்றினார்
நிகழ்வில் ஆசிரிய மாணவி ஷாஜகான் பாத்திமா நுஷ்லா இஸ்லாமும் வள்ளுவமும் என்ற பொருளில் உரை ஆற்றினார். ஆசிரிய மாணவி செல்வி குறள் நெறி வாழ்வு என்ற பொருளில் கவிதை வழங்கினார்
ஆங்கில நெறி ஆசிரிய மாணவி நிரோஜன் கௌசிகா திருக்குறள் குறித்த ஆங்கில மொழி மூலமான விவரண காணொளி ஒன்றை தயாரித்து காட்சிப்படுத்தினார்.
அதிதிப் பேச்சாளர் ஆ.வடிவேலு கலாசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்.