;
Athirady Tamil News

மருதனார்மடத்தில் விபத்து முதியவர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் துவிச்சக்கர வண்டி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதனார் மடத்தை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் , துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரும் காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த முதியவர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.