;
Athirady Tamil News

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த தமிழக படகோட்டிகளுக்கு 06 மாத சிறை

0

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்திய, தமிழக படகோட்டிகள் இருவருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று 06 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன் , இருவருக்கும் தலா 4 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.

கடந்த மாதம் 20ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் படகோட்டிகள் இருவர் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , படகோட்டிகள் இருவருக்கும் தலா 06 மாத சிறைத்தண்டனையும் , தலா 4 மில்லியன் ரூபாய் தண்டபணமும் விதித்த மன்று , தண்ட பணம் செலுத்த தவறின் , 03 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று உத்தரவிட்டது.

இரண்டு படகுகளில் இருந்த நான்கு கடற்தொழிலாளிகளையும் கடுமையாக எச்சரித்த மன்று , இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து, அதனை 06 வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.