கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் ஆறாக ஓடிய பியர்; எடுக்க முண்டியடித்த மக்கள்!

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, வீதி முழுவதும் உடைந்த கண்ணாடி போத்களால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
இந்த விபத்தால் எஹெலியகொடை மின்னான பகுதியில் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக குறித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை அங்கிருந்த பொது மக்கள் வீதியில் கிடந்த உடையாத பியர் போத்தல்களை எடுத்து செல்வதையும் அவதானிக்க முடிந்தது.