;
Athirady Tamil News

யாழில். காணாமல் போன மீனவர்கள் தமிழகத்தில் கைது

0

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன கடற்தொழிலாளர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்ணுற்ற தமிழக கடலோர காவல் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்தனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்கள் இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , கடந்த 15ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்ற சமயம் படகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வந்ததாக கூறியுள்ளனர்

இருவரையும் கைது செய்துள்ள தமிழக பொலிஸார் , இருவரிடமும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இருவரும் கடத்தல் நோக்கத்துடன் தமிழக கடற்பரப்பினுள் நுழைந்தார்களா எனும் சந்தேகத்துடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.