ராணுவத்தினரை காப்பாற்ற திரண்ட பொதுமக்கள்: சுவிட்சர்லாந்தில் ஒரு வித்தியாசமான சம்பவம்

பொதுமக்களைக் காப்பாற்ற ராணுவம் வரவேண்டிய நிலையில், ராணுவத்தினரைக் காப்பாற்ற பொதுமக்கள் வரவேண்டிய சூழ்நிலை ஒன்று சுவிட்சர்லாந்தில் உருவானது.
சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்தில், நேற்று மதியம் ராணுவ கவச வாகனம் ஒன்று சாலையிலிருந்து வழுக்கிச் சென்று Aare ஆற்றுக்குள் விழுந்தது.
உடனடியாக பொதுமக்கள் கொண்ட தன்னார்வலர் குழுக்கள் அந்த கவச வாகனத்திலிருந்தவர்களைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளார்கள்.
காயமடைந்த நிலையில் கவச வாகனத்திலிருந்த பயிற்சி பெறும் ராணுவ வீரர்கள் மூன்று பேரை அவர்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக, ராணுவ நீதித்துறை அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.