முடி உதிர்வதை தடுக்க சிகிச்சை எடுத்த 65 பேர் மருத்துவமனையில் அனுமதி

முடி உதிர்வதை தடுப்பதறகான சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட 65 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முடி வளர சிகிச்சை முகாம்
பஞ்சாப்(punjab) மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் முடி உதிர்வதை தடுப்பதற்கான சிகிச்சை முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு எண்ணெய் வழங்கப்பட்டு, அதை தலையில் தேய்த்தால் முடி உதிர்தல் ஏற்படாது எனவும், முடி வளரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, அந்த எண்ணையை வாங்கி தலையில் தேய்த்துள்ளனர்.
கண் பாதிப்புகள்
ஆனால் இதை தேய்த்த சிறுது நேரத்தில், பலருக்கும் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த அறிகுறிகளுடன், 65 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த முகாமை நடத்திய இருவர் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மருத்துவ முகாம் நடத்த எந்த அனுமதியும் பெறவில்லை எனவும், அவர்களிடம் முறையான மருத்துவ சான்றிதழ் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.