;
Athirady Tamil News

கனடாவுக்கு வந்ததற்காக வருந்துகிறேன்: இந்தியரின் எச்சரிக்கை

0

கனவுகளுடன் கனடாவுக்குப் புறப்பட்டேன், ஆனால், மேற்கத்திய வாழ்க்கைமுறை வெறும் மாயை என்கிறார் இந்தியர் ஒருவர்.

கனடாவுக்கு வந்ததற்காக வருந்துகிறேன்

கனடாவுக்கு வந்ததற்காக வருந்துகிறேன் என்று கூறும் இந்தியாவின் டெல்லியைச் சேர்ந்த அந்த நபர், இந்தியாவில் பலர், வெளிநாடு சென்றால் கஷ்டம் மாறிவிடும் என்ற கனவுகளில் மிதப்பதைக் காண்கிறேன்.

ஆனால், உண்மை நிலை என்ன என்பதை நான் கூறுகிறேன். நான் கனடாவில் வாழ்கிறேன். கனடா அரசு சர்வதேச மாணவர்கள் விடயத்தை வியாபாரமாக நடத்துகிறது.

கனடாவுக்கு வந்தபிறகுதான் நீங்கள் ஏமாந்துபோனதே உங்களுக்குத் தெரியும் என்கிறார் அவர்.
தயவு செய்து சொந்த நாட்டிலேயே இருங்கள்

தயவு செய்து சொந்த நாட்டிலேயே இருங்கள்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டும் அவர், தயவு செய்து இந்தியாவிலேயே இருங்கள் என்கிறார்.

மேற்கத்திய நாடுகள் மாயையை விற்பனை செய்கின்றன என்று கூறும் அவர் நீங்கள் அதை நம்பி கனடாவுக்கு வந்தபிறகுதான் தெரியும் நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளீர்கள் என்பது என்கிறார்.

அவரது இந்த இடுகை இணையத்தில் வைரலாகிவருகிறது. அவருக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.