;
Athirady Tamil News

யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு

0

யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேச்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தி இருந்தனர்.

அவற்றில் 136 கட்சிகளும், 23 சுயேச்சை குழுக்களும் நியமன பத்திரத்தை தாக்கல் செய்தனர். அதில் 114 கட்சிகளினதும் , 10 சுயேச்சை குழுக்களினதும், நியமன பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது

22 கட்சிகளுடையதும் , 13 சுயேச்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன

யாழ் . மாநகர சபையில் தமிழ் மக்கள் கூட்டணி , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஈரோஸ் ஆகிய கட்சிகளினதும், ஞானப்பிரகாசம் சுலக்சன் , கௌசல்யா நரேந்திரன் ஆகியோரின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை நகர சபையில், இராமச்சந்திரன் சுரேன் மற்றும் யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோரது சுயேச்சை குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியினுடையதும், மகாலிங்கம் சதீஸ் மற்றும் சிவகுருநாதன் ஆகியோரின் சுயேட்சையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச சபை ஆகியவற்றில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நியமன பத்திரம் நிராகரிப்பு.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் துரைராசா சுஜிந்தனின் சுயேட்சையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் சபரிமுத்து ஸ்டாலின் என்பவரது சுயேச்சை குழு நிராகரிப்பு.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில், ஸ்ரீலங்கா கம்பினியுஸ் கட்சியின் நியமன பத்திரம் நிகரிப்பு

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் நியமன பத்திரம் நிராகரிப்பு

வலிக்காமம் கிழக்கு பிரதேச சபையில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சி களின் நியமன பத்திரம் நிராகரிப்பு

வடமராட்சி தென்மேற்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளினுடையதும் , தவம் தவநிலைதாசன் என்பவரின் சுயேச்சை குழுவின் நியமன பத்திரம் நிராகரிப்பு

பருத்தித்துறை பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளினுடையதும் ரெஜி ராஜேஸ்வரன் என்பவரின் சுயேச்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிப்பு

சாவகச்சேரி பிரதேச சபையில் வைத்திலிங்கம் ஜெகதாஸ் மற்றும் குணரட்ணம் குகானந்தன் ஆகியோரின் சுயேச்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிப்பு

நல்லூர் பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளினதும் , திலீப் ஜீவரஞ்சன் என்பவரின் சுயேச்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிப்பு

பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபை களில் அனைத்து நியமன பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என யாழ் . மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.