யாழில்.இ.போ.ச மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
2ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த ராஜலிங்கம் கேசவன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி செம்மணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , அவரை முந்தி செல்ல முற்பட்ட வேளை , பேருந்து மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.