பாதசாரியின் உயிரை பறித்த லொறி

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பன்சல் சந்திக்கு அருகில் கண்டியிலிருந்து கொழும்பி நோக்கி பயணித்த லொறியொன்று வீதியில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரி மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
விபத்தில் 64 வயதுடைய ரதாவடுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்துக்கு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விபத்துடன் தொடர்புடைய லொறியையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.