ஐ நா அமைப்பின் முக்கிய பதவிக்கான போட்டியில் ஜேர்மன் பெண் அமைச்சர்

ஐ நா அமைப்பில் முக்கிய பதவி ஒன்றுக்கான போட்டியில் ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரும் உள்ளார்.
ஐ நா அமைப்பில் முக்கிய பதவி
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவருக்கான போட்டியில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஆனலேனா பேர்போக்கும் உள்ளார்.
சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான ஜேர்மனியின் தற்போதைய அரசு, ஆனலேனாவை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் பதவிக்காக நாமினேட் செய்துள்ளது.
இந்நிலையில், ஆனலேனாவுக்கு பெரும் மரியாதை உள்ளதுடன், அவர் அந்த பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்றும் ஜேர்மன் அரசின் செய்தித்தொடர்பாளரான Steffen Hebestreit தெரிவித்துள்ளார்.