;
Athirady Tamil News

21 வயதில் வேலையை தொடங்கி 23 வயதில் ஓய்வூதியத்துடன் ஓய்வு – இளைஞர் படைத்த சாதனை

0

23 வயது இளைஞர் முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

23 வயதில் ஓய்வு
பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் 20 வயதுக்கு மேல் வேலை பார்க்க தொடங்கி 60 களில் ஓய்வு பெறுகிறார்கள். சிலருக்கு பொருளாதார தேவை காரணமாக வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டியுள்ளது.

ஆனால் தற்கால இளைய தலைமுறையினர் இளம் வயதிலே ஓய்வு பெரும் மனநிலையில் உள்ளனர்.

அதே போல், ரஷ்யாவின் டொனெட்ஸ்கை பகுதியை சேர்ந்த பாவெல் ஸ்டெப்சென்கோ(Pavel Stepchenko) என்ற இளைஞர், தனது 23 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் தனது 21 வயதில் வேளைக்கு சேர்ந்து, 23 வயதில் முழு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளுடன் ஓய்வு பெறுகிறார்.

சாதனை புத்தகத்தில் பெயர்
ரஷ்ய உள்துறை அமைச்சகத்தின் கல்வி நிறுவனத்தில் 5 ஆண்டுகள் கல்வி பயின்ற பாவெல், தனது 21 வயதில் உள்நாட்டு விவகார அமைப்பின் பிராந்தியப் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார்.

நவம்பர் 28, 2023 அன்று, ஓய்வு பெற விண்ணப்பித்த பாவெலின் கோரிக்கை சமீபத்தில் ரஷ்யா அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தற்போது 23 வயதில் முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நாட்டிலேயே இளம் வயதிலே ஓய்வு பெரும் இளைஞர் என்பதால், இவரின் பெயர் Book of Records of Russia என்ற புத்தக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.