நேர்காணலில் பதிலளிக்கும் போது விமானம் பறந்ததை பார்த்ததால் வேலையை இழந்த இளைஞர்

இளைஞர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் பதிலளித்து கொண்டிருக்கும் போது வெளியில் விமானம் பறந்ததை பார்த்ததால் வேலையை இழந்துள்ளது.
வேலையை இழந்த இளைஞர்
பெங்களூருவில் இளைஞர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் தனக்கு நடந்த அனுபவங்களை பற்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த இளைஞர் நிறுவனம் ஒன்றிற்கு வேலைவாய்ப்பு தேடி நேர்காணலுக்காக சென்றிருந்தார். அப்போது, நிறுவனத்தின் மேலாளர் அவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்த கேள்விகளுக்கு இளைஞர் பதிலளித்து கொண்டிருக்கும் போது விமானம் பறக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அந்த இளைஞர் நிறுவனரின் கேள்விக்கு பதிலளிக்காமல் கண்ணாடி சுவற்றின் வழியாக விமானம் பறப்பதை பார்த்துள்ளார்.
பின்னர், அந்த இளைஞர் நேர்காணல் முடிந்து சென்ற போது அவர் அந்த வேலைக்கு தகுதி அற்றவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இளைஞரின் உடல் மொழியும், தன்னம்பிக்கையும், எதிர்கால திட்டங்கள் பற்றி தெளிவின்மையும் தான் அவர் தகுதியற்றவர் என்பதற்கான காரணம் என்று நிறுவன மேலாளர் கூறியதாக தெரிவித்திருந்தார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.