யாழில். போதையில் குடும்பத்துடன் தகராறு செய்த இளைஞன் கைது

போதையில் தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞனை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவர் போதையில் , வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அது தொடர்பில் வீட்டாரால் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்
குறித்த இளைஞன் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.