;
Athirady Tamil News

Snickers சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட பிரித்தானியர்., கடைசி ஆசையை நிறைவேற்றிய உறவுகள்

0

பிரித்தானியாவில் ஒருவர் Snickers சொக்லேட் வடிவ சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த 55 வயதான பால் புரூம் (Paul Broome), தனது நகைச்சுவை உணர்வுக்காக பெயர் பெற்றவர்.

அவர் இறப்பதற்கு முன்பு, ஒரு ‘Snickers’ சொக்லேட் வடிவ சவப்பெட்டியில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று நகைச்சுவையாக சொல்லிக்கொண்டிருந்தார்.

அவரது கடைசி விருப்பத்தை அவரது குடும்பத்தினர் நினைவுபடுத்தி நிறைவேற்றியுள்ளனர்.

அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள், அவரது வித்யாசமான நகைச்சுவை உணர்வை கொண்டாடும் வகையில், ஸ்னிக்கர்ஸ் வடிவில் ஒரு சவப்பெட்டியை தயாரித்து அதில் “I’m Nuts” என்ற வாசகத்தையும் சேர்த்துள்ளனர். இந்த வார்த்தை, அவரது நகைச்சுவை தன்மையை பிரதிபலிக்கிறது.

கிரிஸ்டல் பாலஸ் கால்பந்து ரசிகர்
பால் புரூம், கிரிஸ்டல் பாலஸ் FC கால்பந்து அணியின் தீவிர ஆதரவாளராக, 40-க்கும் மேற்பட்ட அணி ஜெர்ஸிகளை சேகரித்து, செல்ஹர்ஸ்ட் பார்க் மைதானத்தில் சகோதரர்களுடன் போட்டிகளை காண்பதை மிகவும் ரசித்தவர். அவரது சவப்பெட்டியில் அந்த அணியின் லோகோ பதிக்கப்பட்டிருந்தது.

சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றிய இறுதி ஊர்வலம்
அவரின் இறுதி ஊர்வலத்தில், அவருடைய நண்பர்கள் அவரை நினைவுகூரும் வகையில் தனிப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து, கைத்தட்டல்களுடன் அவரை அனுப்பி வைத்தனர்.

பால் புரூம் இறப்பதற்கு முன்பு, மனநலம் குன்றியவர்களுக்கு உதவி செய்யும் பராமரிப்பு உதவியாளராக பணி புரிந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.