யாழில். ஜனனம் அறக்கட்டளையினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் , கோப்பாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க ஐ.டி.எம்.ன்.சி (IDMNC) சர்வதேச
உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனின் நிதியுதவியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கொலின்ஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்களிடம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒரு இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
அதன் போது தமது விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் முகமாக தமது கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்த கலாநிதி.வி.ஜனகனுக்கு நன்றிகளை கழக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.