யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இரு இளைஞர்களையும் கைது செய்து சோதனையிட்ட போது, 805 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் , அவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.