பயணிகளுடன் வீதியில் குடைசாய்ந்த பேருந்து; நள்ளிரவில் நேர்ந்த சோகம்

தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கம்பளை பொரலுமங்கட, சிஹின முருக்கு சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து வீதிக்கு அருகிலிருந்து வீட்டின் மீது மோதியுள்ளதுடன், வீடு பலத்த சேதமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் பாதிப்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.