;
Athirady Tamil News

சுனிதா வில்லியம்ஸுக்கு கூடுதல் சம்பளம்? “என்னுடைய பணத்தை கொடுப்பேன்” டிரம்ப் அதிரடி!

0

சுனிதா வில்லியம்ஸுக்கு என்னுடைய சொந்த பணத்தை கொடுப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாதனை விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 9 மாத கால வரலாற்று சிறப்புமிக்க காத்திருப்புக்குப் பிறகு சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பினார்.

சுமார் 286 நாட்கள் விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

அவரது 8 நாள் திட்டமிடப்பட்ட பயணம் எதிர்பாராத விதமாக 9 மாதங்களாக நீடித்தது.

சுனிதா வில்லியம்ஸுக்கு கூடுதல் சம்பளம்
இந்த அசாதாரண சூழ்நிலையில், அவருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுமா என்ற கேள்வி உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இது குறித்து யாரும் என்னிடம் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அப்படி ஏதேனும் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டியிருந்தால், எனது சொந்த பணத்தை கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று அதிரடியாக அறிவித்தார்.

நாசா விஞ்ஞானிகள் அமெரிக்க அரசின் ஊழியர்கள் என்பதால், அவர்களுக்கு வழக்கமான ஊதியம் மட்டுமே வழங்கப்படும். பணியில் கூடுதல் நேரம் அல்லது விண்வெளிப் பயணம் என எதுவாக இருந்தாலும் அதில் மாற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க்கை பாராட்டிய டிரம்ப்
மேலும், விண்வெளிப் பயணத்தில் எலான் மஸ்க்கின் பங்களிப்பை வெகுவாக பாராட்டிய அவர், “எலான் மஸ்க் இல்லையென்றால் இது சாத்தியமில்லை. அவர் இல்லையென்றால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் நீண்ட நாட்கள் விண்வெளியில் சிக்கியிருக்க வேண்டியிருக்கும்.

ஏனெனில், விண்வெளியில் 9 முதல் 10 மாதங்கள் வரை இருந்தால் விண்வெளி வீரர்களின் உடல்நிலை மோசமடையும் அபாயம் உள்ளது. இது நமக்கு பெரும் சிக்கலாக இருந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, எலான் மஸ்க் சரியான நேரத்தில் உதவினார்” என்று குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.