மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயர்கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் கைது

குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகளை தொடர்ந்தும் பாலியல் ரீதியாக இம்சித்த சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மாணவர்கள் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபருக்கு சொந்தமான உயர்கல்வி நிறுவனத்தில் கல்வி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்பட்ட மாணவிகள் தொடர்ந்தும் பாலியல் ரீதியாக இம்சிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.