;
Athirady Tamil News

பதுளை – பண்டாரவளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயம்

0

பண்டாரவளையில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் டோவா பகுதியில் நேற்று (23) பிற்பகல் முச்சக்கர வண்டி மற்றும் வான் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மேலதிக விசாரணை
இந்த விபத்தில் ஏழு பேர் காயமடைந்து பண்டாரவளையில் உள்ள பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் அடங்குவதாகவும், அவர்களில் தனியார் பேருந்தின் நடத்துனர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

காயமடைந்த நான்கு பெண்களும் மற்ற ஆணும் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.