;
Athirady Tamil News

120 அடி உயர 2 தேர்கள் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

0

ஒசூர் அருகே உஸ்கூர் மத்துரம்மா கோயில் தேர்த் திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில், இருவர் பலியான நிலையில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம், உஸ்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்தூரம்மா கோயில் உள்ளது. இக்கோயிலை ராஜேந்திரசோழன் கட்டியதாகவும், முற்காலத்தில் திப்புசுல்தான், மைசூா் அரச வம்சத்தினா் பராமரித்து வழிபாடு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மத்தூரம்மாவை உஸ்கூர் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 48 கிராமங்களை சேர்ந்தோரும், மாநில எல்லையில் உள்ளதால் ஒசூர் பகுதியைச் சோ்ந்தோரும் வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயில் தேர்த்திருவிழா சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், சுமாா் 120 அடி முதல் 130 அடி வரை உள்ள 7 தேர்களை 150 காளைகள், 40 பொக்லைன் இயந்திரங்கள், 50 டிராக்டர்கள் இழுத்து வந்தன.

இதற்காக உஸ்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினா் போட்டிப் போட்டுக்கொண்டு தோ்களை அலங்கரித்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இழுத்து வந்தனர்.

அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 127 அடி உயரம் கொண்ட ராயசந்திரம், தொட்ட நாகமங்கலம் ஊர்களைச் சோ்ந்த 2 தேர்கள் கீழே விழுந்தன.

தேர்கள் கவிழ்ந்ததில் இருவர் பலி

இந்த விபத்தில் லோதிக் என்ற தமிழக பக்தர் பலியானர். தொடர்ந்து, இவ்விபத்தில் பெங்களூரு கெங்கேரியைச் சேர்ந்த ஜோதி என்பவரும் பலியானாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காயமடைந்த பக்தர்களுக்கு ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டும் மத்துரம்மா கோயில் தேர்த் திருவிழாவில் தேர் சாய்ந்தது 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.