கொடுக்கல் வாங்கல் தகராறு; இளைஞன் மீது அசிட் வீசிய பெண்கள்

களுத்துறை, பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் போது அசிட் வீச்சுக்குள்ளாகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரண்டு பெண்களுக்கும் இளைஞர் குழுவொன்றுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது குறித்த பெண்கள் இருவரும் எதிர்த்தரப்பில் இருந்த இளைஞன் ஒருவர் மீது அசிட் வீச்சை மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.