மறந்துபோன உணவு பொதிக்காக தொடருந்தைத் தாமதப்படுத்திய ஓட்டுநர் ; திணைக்களம் எடுத்த அதிரடி முடிவு

மறந்துபோன உணவு பொதியைக் கொண்டு வரும் வரை தொடருந்தைத் தாமதப்படுத்திய ஓட்டுநருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குருநாகலில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த தொடருந்தே இவ்வாறு தாமதமாக இயக்கப்பட்டுள்ளது.
தமது உணவு வழமையாக வைக்கப்படும் இடத்தில் இல்லாமையினால் அந்த உணவுப் பொதியைக் கொண்டு வரும் வரை தொடருந்தை இயக்காமல் தாமதப்படுத்தியுள்ளார்.
இதனால் பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.