சிறுவர் இருவர் தப்பியோட்டம்!

நீதிமன்ற உத்தரவின் பேரில் களுத்துறை, கொஹொலான பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது. இதன்போது 12 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பியோடிய சிறுவர் இருவரும் சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்தில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் கழிவறைக்குச் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.