பிரான்ஸ் தெருக்களில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்: என்ன காரணத்துக்காக?

சனிக்கிழமையன்று, பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலும் மற்ற நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், இனவெறுப்புக்கு எதிராகவும், வலதுசாரி அமைப்புகளின் வளர்ச்சிக்கு எதிராகவும் திரண்டார்கள்.
தெருக்களில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்
சுமார் 91,000 பேர் பிரான்ஸ் முழுவதும் பேரணிகளில் பங்கேற்றதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இனப்பாகுபாடு ஒழிப்பு தினத்துக்கு மறுநாள் இந்த பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இனவெறுப்பு சம்பவங்கள் அபாயகரமான அளவில் அதிகரித்துவருவதாக Human Rights League என்னும் அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், உலக முழுவதும் வெளிநாட்டவர்கள், அவர்களுடைய குழந்தைகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கெதிரான தாக்குதல் நடந்துவருவதாக SOS Racisme என்னும் அமைப்பின் தலைவரான Dominique Sopo என்பவரும் தெரிவித்துள்ளார்.
பேரணிகளில் பங்கேற்ற சிலர், பிரான்சில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இனவெறுப்பு, வலதுசாரி ஆதரவு மட்டுமின்றி, பிற்போக்குத்தனமான அரசியல் சித்தாந்தங்கள் அதிகரித்து வருவது குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.