;
Athirady Tamil News

வட மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல்

0

தேர்தல் முறைப்பாடுகளை பொலிசார் முகாமைத்துவம் செய்வது மற்றும் தேர்தல் கடமைகளின் போது அவர்களின் வகிபாகம் தொடர்பாக வட மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் நேற்று(24.03.2025) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சியிலுள்ள தனியார் விடுதியொன்றில், தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் இணைய வழி செயலி(Zoom) ஊடாக இணைந்து கொண்டார்.

இதன் போது தேர்தல் விடயங்கள் மற்றும் கடமைப் பொறுப்புகள் தொடர்பில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்(சட்டம், விசாரணை மற்றும் திட்டங்கள்) பி. பீ. சி. குலரத்ன, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், பொலிஸ் திணைக்களத்தின் சட்ட பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், வட மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், தேர்தலுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

o

You might also like

Leave A Reply

Your email address will not be published.