யாழில். அதிக விலைக்கு அரிசி விற்ற பலநோக்கு கூட்டுறவு சங்கம் – ஒரு இலட்ச ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் , காரைநகர் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளையில் கட்டுப்பட்டு விலைக்கு அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிளையில் அரிசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர் அதிகார சபையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட போது, அரிசி அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து, பாவனையாளர் அதிகார சபையினரால் , பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு எதிராக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வழக்கு, பதில் நீதவான் ஷாலினி ஜெயபாலசந்திரன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு இலட்ச ரூபாய் தண்டம் அறவிடப்பட்டது