;
Athirady Tamil News

மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை; உரிமையாளருக்கு சிறை

0

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் தயாரித்து விற்பனை செய்த உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான திங்கட்கிழமை (24) பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவு
சோதனை நடவடிக்கையில் ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு மாதகாலம் சிறையில் அடைக்குமாறும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் கொல்கலனில் அமைக்கப்பட்டுள்ள இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்த நீதவான் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.