யாழில். அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.