தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ: பல ஏக்கர் நிலப்பரப்பு தீயில் கருகி நாசம்!

சியோல்: தென் கொரியாவின் தென் கிழக்குப் பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிகிறது. காட்டுதீயால் சுமார் 36 ஏக்கர் நிலப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகள் சாம்பல் மண்டலமாக காட்சியளிக்கின்றன.
சான்சியாங்க் பிராந்தியத்தில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுkகுள் கொண்டுவர நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்களும் 100-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (மார்ச் 25) காலை நிலவரப்படி, காட்டுத்தீ பரவிய இடங்களுள் 90 சதவிகித பகுதிகளில் தீ கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.