;
Athirady Tamil News

இந்த மக்கள் அமெரிக்காவிற்கு பயணப்பட வேண்டாம்… எச்சரிக்கும் பல ஐரோப்பிய நாடுகள்

0

காலவரையின்றி தடுத்து வைக்கப்படும் அபாயம் இருப்பதால் திருநங்கை குடிமக்கள் தற்போது அமெரிக்காவிற்கான பயணங்களை கைவிட வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் பல எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு பாலினங்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்த டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கா இனி ஆண் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் என முதல் நாளிலேயே அறிவித்தார்.

இதில் பாகுபாட்டைத் தடுக்கும் உத்தரவை ரத்து செய்தல் மற்றும் ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்றுவதற்கான தடை ஆகியவை அடங்கும். மட்டுமின்றி இந்த முடிவு திருநங்கைகள் மற்றும் non-binary பயணிகளுக்கு தடையாக மாறக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

மேலும் அவர்களின் விசாக்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களில் தற்போது அவர்களின் ‘sex at birth’ பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது ஆண் அல்லது பெண் என்றல்லாமல் அவர்களின் ஆவணங்களில் X என குறிப்பிடப்பட்டிருந்தால், அவர்கள் அமெரிக்காவில் இனி நுழைவது கடினம்.

சமீப நாட்களில் பலர், பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்க எல்லையில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே, பிரான்ஸ், அயர்லாந்து மற்றும் ஜேர்மனி உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்களின் திருநங்கை குடிமக்களை அமெக்க பயணங்கள் தொடர்பில் எச்சரித்து வருகிறது.

பிரித்தானியா மற்றும் கனடா
பிறக்கும் போது அவர்கள் எந்த பாலினம் என்பதை பயணிகள் உறுதி செய்ய வேண்டும் என அயர்லாந்தின் வெளிவிவகாரத் துறை திங்களன்று அறிவித்துள்ளது.

இதுவரை ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, நோர்வே, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் திருநங்கை குடிமக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய சில நாடுகள் மட்டும் இதுவரை இதுபோன்ற எச்சரிக்கை ஏதும் தங்கள் திருநங்கை குடிமக்கள் தொடர்பில் விடுக்கவில்லை. ஆனால் பொதுவான எச்சரிக்கை மட்டுமே இந்த இரு நாடுகளும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.